/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
/
பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 29, 2025 03:43 AM

திருப்பூர்; பைப் லைனை மாற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைமடை விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பி.ஏ.பி., அலகுமலை கிளை வாய்க்கால் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
பாசன விவசாயிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில், பி.ஏ.பி., கிளை வாய்க்கால் மதகு எண்: 8ல், 6 இன்ச் பைப் பொருத்தப்பட்டுள்ளது. இதை மாற்றிவிட்டு, 9 இன்ச் அளவுள்ள பைப் பொருத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெரிய அளவிலான பைப் பொருத்தினால், கடைமடைக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேராது.
இதனால், மூவாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தென்னை, காய்கறி உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்படும். பாசன விவசாயிகளை கலந்தாலோசிக்காமலேயே, பைப்லைன் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.
கிளை வாய்க்காவில் பெரிய பைப் பொருத்தும் திட்டத்தை கைவிடவேண்டும். இதுகுறித்து, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். பரிசீலித்து, பைப் லைனை மாற்றும் உத்தரவை திருப்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

