/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசின் கவனம் ஈர்க்க கோரிக்கை மாநாடுஅமைச்சரிடம் மனு வழங்கிய விவசாயிகள்
/
அரசின் கவனம் ஈர்க்க கோரிக்கை மாநாடுஅமைச்சரிடம் மனு வழங்கிய விவசாயிகள்
அரசின் கவனம் ஈர்க்க கோரிக்கை மாநாடுஅமைச்சரிடம் மனு வழங்கிய விவசாயிகள்
அரசின் கவனம் ஈர்க்க கோரிக்கை மாநாடுஅமைச்சரிடம் மனு வழங்கிய விவசாயிகள்
ADDED : ஜன 02, 2025 11:25 PM

திருப்பூர்: விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் விவகாரத்தில், அரசின் கவனம் ஈர்க்க, விவசாயிகள் சார்பில் வரும், 5ம்தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், கோவை - இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை, விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை ஐ.டி.பி.எல்., நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, பணிக்கு எதிராக தடை உத்தரவும் பெற்றனர்.
'கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், குழாய் பதிக்கப்பட்டதால் பாதிப்புக்குள்ளானோம்; அதில் இருந்தே இன்னும் மீளவில்லை. தற்போது, மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதியை வைத்து மீண்டும் குழாய் பதிக்க துவங்கியுள்ளனர்; சாலை ஓரமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, மத்திய பெட்ரோலிய அமைச்சர், செயலர் ஆகியோரை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடந்த, 40 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், 5ம் தேதி காடையூர் எஸ்.எஸ். மஹாலில், 'மாற்று வழி திட்ட கோரிக்கை மாநாடு' நடத்த முடிவெடுத்துள்ளனர். இதற்காக, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரையும் சந்தித்து, மனு வழங்கினர்.

