/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடையில் பல நுாறு யூனிட் மண் கடத்தல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்
/
ஓடையில் பல நுாறு யூனிட் மண் கடத்தல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்
ஓடையில் பல நுாறு யூனிட் மண் கடத்தல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்
ஓடையில் பல நுாறு யூனிட் மண் கடத்தல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்
ADDED : ஏப் 30, 2025 12:48 AM

பல்லடம், ; பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் - ஊராட்சிக்கு உட்பட்ட ஓடையின் ஒரு பகுதியில், பல நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வி.ஏ.ஓ.,விடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஓடையில், ஏறத்தாழ, 500 யூனிட்டுக்கும் அதிகமான மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. பல்லடம் அருகே, சொந்த விளை நிலத்தில் இருந்து, தனது உறவினரின் விளை நிலத்துக்கு மண் எடுத்துச் சென்ற விவசாயி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மண் கடத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஏன் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில், ஓடைகளே காணாமல் போகும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
மண் அள்ளி, 15 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளாளுக்கு இப்படியே மண் அள்ளினால் ஓடை என்னவாகும்? உரிய நடவடிக்கை தான் தேவை. இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி, வீரபாண்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரைப்புதுார் வி.ஏ.ஓ., கவுரியிடம், இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, ''மண் எடுக்கப்பட்ட இடம் வீரபாண்டி எல்லைக்கு உட்பட்டது,'' என்று கூறி முடித்தார்.
வீரபாண்டி வி.ஏ.ஓ., சிவசாமியிடம் கேட்டதற்கு, ''மண் எடுத்த இடம், கரைப்புதுார் - வீரபாண்டி என இரு கிராம எல்லைக்கு உட்பட்டது என்பதால், இது தனக்கு வராது. மண் கடத்தியது எனக்கே தெரியவில்லை; ஆர்.ஐ., சொல்லித்தான் தெரியும்,'' என்றார்.

