ADDED : அக் 22, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னையை காப்பாற்ற தமிழக அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடைகள் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
நேற்று கொடுவாய் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் சங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கோகுல் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநிலத் தலைவர் சண்முகம், மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.