ADDED : டிச 12, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், ரேஷன் கடை தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தில், 52வது நாளாக, வெள்ளகோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவைத் தலைவர் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், காங்கயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கரூர் மாவட்ட தலைவர் பால்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.