/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க மறுக்கும் அதிகாரிகள் பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
/
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க மறுக்கும் அதிகாரிகள் பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க மறுக்கும் அதிகாரிகள் பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க மறுக்கும் அதிகாரிகள் பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
ADDED : ஏப் 08, 2025 10:16 PM

உடுமலை,; உடுமலை ஆலாம்பாளையம் குளத்திற்கு, அரசு ஆணைப்படி நீர் திறக்காத அதிகாரிகளை கண்டித்து, உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.
சுற்றுப்புறத்திலுள்ள குறிச்சிக்கோட்டை, மடத்துார், குரல்குட்டை, மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு, நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் வாயிலாக, திருமூர்த்தி பாலாறு வழியாக நீர் வரத்து கிடைத்து வந்தது. திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது.
இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப்பின், கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., துணை அமைப்பாக இக்குளம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது.
அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு இரண்டாம் சுற்றாக, திருமூர்த்தி அணை பொது கால்வாய், 1.20 கி.மீ., ல் பிரியும் உடுமலை கால்வாயில், 5.130 கி.மீ.,ல் அமைந்துள்ள, மானுப்பட்டி கிளை கால்வாய், 2.65 வது கி.மீ.,ல் அமைந்துள்ள மதகு வழியாக, கடந்த, 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, 20 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், அரசு உத்தரவு அடிப்படையில், அதிகாரிகள் நீர் திறக்காமல், திட்டக்குழு எதிர்ப்பு என இழுத்தடித்து வருகின்றனர். இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள், நேற்று உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., திட்டம் துவங்குவதற்கு முன், பாலாறு ஓடைகள் வாயிலாக நீர் வரத்து காணப்பட்ட குளம் என்பதால், துணை அமைப்பாக கருதி, ஆண்டுக்கு இரு முறை குளத்திற்கு நீர் திறக்க அனுமதி உள்ளது.
தற்போது, அரசு ஆணை இருந்தும், ஒரு சிலர் துாண்டுதல் காரணமாக, தண்ணீர் திறக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
பி.ஏ.பி., திட்டம் துவங்கியது முதல், முதல் முறையாக வட்டமலைக்கரை ஓடைக்கும், உப்பாறு அணைக்கும் நீர் வழங்கியதை கண்டுகொள்ளாதவர்கள், துணை அமைப்பான ஆலாம்பாளையம் குளத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள், நீர் திருட்டு, ஆழியாற்றில் நீர் திருட்டு என ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில், அவற்றை சரி செய்யாமல், ஏராளமான கிராமங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக, 20 மில்லியன் கனஅடி நீர், பூசாரிநாயக்கன் குளத்திற்கு திறப்பதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதும், அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும், இரு தரப்பு விவசாயிகளிடையே மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும்.
அரசு உத்தரவு அடிப்படையில், பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் திறக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.