/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமசபாவில் விவசாயிகள் போராட்டம்; தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகள்
/
கிராமசபாவில் விவசாயிகள் போராட்டம்; தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகள்
கிராமசபாவில் விவசாயிகள் போராட்டம்; தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகள்
கிராமசபாவில் விவசாயிகள் போராட்டம்; தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகள்
ADDED : ஜன 26, 2025 11:58 PM

திருப்பூர்; கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில் கருப்புக்கொடியுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், ஊதியூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்துார் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை, தெருநாய்கள் கடித்து கொன்றுவரும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.
'காங்கயம் பகுதியில் மட்டும் மாதத்திற்கு 150 முதல் 200 வரை, ஆடு மற்றும் கோழிகள், தெருநாய்களால் கொல்லப்படுகின்றன' என்கின்றனர் விவசாயிகள். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நேற்று நடந்தன. காங்கயம் தாலுகாவில் உள்ள ஆலாம்பாடி, சிவன்மலை, வீராணம்பாளையம், மறவபாளையம், தம்புரெட்டிப்பாளையம், வேலப்பநாயக்கன்பாளையம் வலசு, பச்சாம்பாளையம், வீரசோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் கால்நடைகளுடன் கருப்புக்கொடியேந்தி விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ''எங்களது கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, கிராம சபைகளில் பங்கேற்றோம். இனியாவது அரசு எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

