ADDED : மே 23, 2025 12:29 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குப்பைகளை தரம் பிரித்தும், உரிய விதிகளைப் பின்பற்றி அகற்றவும் வலியுறுத்தி, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தடை செய்யக் கோரியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், காளம்பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, த.வெ.க., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்புகள் சார்பில் சதீஷ்குமார், முகிலன், இன்பசேகரன் உள்ளிட்டோர் பேசினர். இதில், பங்கேற்றவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.