/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விவசாயிகள் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்'
/
'விவசாயிகள் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்'
'விவசாயிகள் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்'
'விவசாயிகள் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்'
ADDED : மே 03, 2025 04:41 AM
பொங்கலுார்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி அறிக்கை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலுார், திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான விவசாயிகள் பணம், நகைக்காக கொடூரமான முறையில் கடந்த ஓராண்டுக்குள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் விவசாயத் தம்பதிகள் ராமசாமி- - பாக்கியம்மாள் ஆகியோர் திருடர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கலுார், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.
அதற்குள் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கொடூர கொலை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைது செய்ய முடியவில்லை. படுகொலைகள் தொடர்ந்து நடப்பதால், தமிழக அரசு கிராமம்தோறும் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் கொண்ட பாதுகாப்பு படையை உருவாக்கி, நவீன துப்பாக்கியை கையாள பயிற்சி கொடுக்க வேண்டும். தனியாக தோட்ட சாலைகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாநில அரசு துப்பாக்கி உரிமம் வழங்கி, மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.