ADDED : பிப் 01, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாலுகாவில், பெரமியம், துரம்பாடி கிராமங்களில், தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம், விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து வருகிறது.
இதற்கான உரிமம் பெறுவதற்காக, அந்த நிறுவனம், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை; கலெக்டர் உத்தரவுப்படியான இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் மற்றும் விவசாயிகள் சிலர், கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்துசென்றனர்.