/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை விவசாயிகள் அதிருப்தி
/
கால்நடைத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை விவசாயிகள் அதிருப்தி
கால்நடைத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை விவசாயிகள் அதிருப்தி
கால்நடைத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை விவசாயிகள் அதிருப்தி
ADDED : டிச 23, 2024 04:54 AM
உடுமலை : கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசிகள் செலுத்துவதில் குளறுபடி, மருந்தகங்கள் முறையாக திறக்காததால், விவசாயிகள் பாதித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: உடுமலை பகுதியிலுள்ள கால்நடைத்துறை, மருந்தகங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள கிளை நிலையங்களில் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாததால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
அதே போல், நோய்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு இல்லாததால், வெளியில் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. கால்நடைகளுக்கு, கோமாரி நோய், அம்மை நோய் பரவி வருகிறது. பல பகுதிகளில் கால்நடைகள் இறந்துள்ளன.
மின் வாரியத்தில், விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கவில்லை.
தயார் நிலை பதிவு செய்து, மின் கம்பங்கள், மின் உபகரணங்கள் பொருத்திய விவசாயிகளுக்கு கூட மூன்று ஆண்டாக மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் நேரடியாக அவர்களுக்கு, மானிய திட்டங்கள், இடு பொருட்கள் வழங்க வேண்டும்.
மடத்துக்குளம் பகுதியில், 3 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் பாதித்துள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறு நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு, புதிய கடன் வழங்கவும், கூடுதலாக ஒரு மாதம் பாசனத்திற்கு நீர் வழங்கவும் வேண்டும்.
வருவாய்த்துறையில், எஸ்.எப்., 7 மற்றும் எஸ்.எப்., 8 என ஆவணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக வீடுகள், நிலங்கள் பயன்படுத்தியும், உரிய ஆவணங்கள் இருந்தும், இச்சிக்கல் காரணமாக, இரு தாலுகாவிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதித்து வருகின்றனர்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நில மாற்றம் தொடர்பாக, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், மாற்றி தரப்படும். கால்நடைத்துறையில் தற்போது, மருந்துகள் வந்துள்ளன,' என்றனர்.

