/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்களால் பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கேட்டு ஒருங்கிணையும் விவசாயிகள்
/
தெருநாய்களால் பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கேட்டு ஒருங்கிணையும் விவசாயிகள்
தெருநாய்களால் பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கேட்டு ஒருங்கிணையும் விவசாயிகள்
தெருநாய்களால் பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கேட்டு ஒருங்கிணையும் விவசாயிகள்
ADDED : மார் 15, 2025 11:52 PM
திருப்பூர்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து, 'தெரு நாய்களால் கடிபட்டு பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வேண்டும்' என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் விவசாய அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து, பட்டியில் கட்டப்பட்டுள்ள ஆடுகளை, தெருநாய்கள் கடிக்கின்றன; இதில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகின்றன. 'அவற்றுக்கு சந்தை மதிப்பிலான இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை விவசாயிகள் எழுப்பி வரும் நிலையில், அரசின் கவனம் ஈர்க்க ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அருகேயுள்ள ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல் என பல்வேறு இடங்களிலும், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும், விவசாய அமைப்பினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளம் வாயிலாக விவசாயிகளை ஒருங்கிணைக்கும் விவசாய அமைப்பினர், அவரவர் பகுதியில், தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, கருத்து பரிமாறி வருகின்றனர்.
பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்ல, பல்வேறு திட்டமிடல்களை விவசாயிகள் பகிர்ந்து வரும் நிலையில், உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீடு தொடர்பான கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அரசு இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் எதிர்பார்ப்பு.