/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் கொந்தளிப்பு! உண்ணாவிரதத்துக்கு போலீஸ் திடீர் தடை ; நள்ளிரவில் மைக்செட், சேர்கள் பறிமுதல்
/
விவசாயிகள் கொந்தளிப்பு! உண்ணாவிரதத்துக்கு போலீஸ் திடீர் தடை ; நள்ளிரவில் மைக்செட், சேர்கள் பறிமுதல்
விவசாயிகள் கொந்தளிப்பு! உண்ணாவிரதத்துக்கு போலீஸ் திடீர் தடை ; நள்ளிரவில் மைக்செட், சேர்கள் பறிமுதல்
விவசாயிகள் கொந்தளிப்பு! உண்ணாவிரதத்துக்கு போலீஸ் திடீர் தடை ; நள்ளிரவில் மைக்செட், சேர்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 14, 2025 12:47 AM

திருப்பூர்; மங்கலத்தில், நொய்யல் நதிப் பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் மேற்கொள்ள இருந்த உண்ணாவிரதத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்; இருக்கைகளை பறிமுதல் செய்ததால், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
நொய்யலை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது. திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலத்தில், நொய்யல் கரையோரம் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, போராட்டத்துக்கு, திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு, 12:30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடலாம்; போராட்டம் வேண்டாமென அறிவுறுத்தினர். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடக்குமென, விவசாயிகள் தெரிவித்தனர்.
போலீசார், போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி, உண்ணாவிரத பந்தலில் இருந்த சேர்கள் மற்றும் 'மைக்செட்' ஆகிய வற்றை போலீசார் நள்ளி ரவில் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.
பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியுடன் நேற்று காலை, 8:00 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. விவசாயிகள், மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளுடன் வந்திருந்தனர்.
இருக்கைகளை போலீசார் எடுத்துச்சென்றதால், தரையில் அமர்ந்து, 100க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தை துவக்கினர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறுகையில், ''மங்கலம் போலீசார் கண்ணியமற்ற முறையில், அமரக்கூட நாற்காலி கொடுக்காமல் கொடுமைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
கைது செய்வதாக போலீஸ் மிரட்டல்
உண்ணாவிரதத்துக்கு, முதலில் அனுமதி வழங்கிய மங்கலம் போலீசார், திடீரென அனுமதியை ரத்து செய்தனர்; இருக்கைகள்,'மைக் செட்'டை எடுத்துச்சென்றனர். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டத்தை துவக்கினோம். கைது செய்வதாகவும் மிரட்டினர். போலீசார் கெடுபிடியால், போராட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டோம்.
- திருஞானசம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், தமிழக நொய்யல்விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.