/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 10:47 PM

உடுமலை; உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. வனச்சரக அலுவலர் வாசு தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் பேசியதாவது:
மலையடிவார கிராமங்களில், யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் எல்லை தாண்டி வந்து, பயிர்களை சேதப்படுத்துவதோடு, மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
எனவே, வன எல்லைகளில் உள்ள சோலார் மின் வேலிகளை புதுப்பிக்கவும், இல்லாத பகுதிகளில் புதிதாக அமைக்கவும் வேண்டும். வன விலங்குகள், வனத்திலிருந்து வெளியேறுவதை தடுக்க, அகழிகள் அமைக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகள், வனத்திலிருந்து வெளியேறி, பல கி.மீ.,துாரமுள்ள கிராமங்களிலும் முகாமிட்டு, பல்கி பெருகியுள்ளன. பயிர்களை தொடர்ந்து நாசம் செய்வதோடு, மனிதர்கள், கால்நடைகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காண்டூர் கால்வாய் குறுக்கே,மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், கால்வாய் மேற்பகுதியில் உயர் மட்ட நீர் வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, வன விலங்குகள் வெளியேறி, விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது.
இதனை தடுக்க வேண்டும். மலைப்பகுதியில், குழிப்பட்டி, குருமலைக்கு பாதை அமைக்கப்பட்டபோது, மரங்கள் வெட்டப்பட்டது. இப்பகுதிகளில், அகற்றப்பட்ட மரங்களை விட கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.