sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

/

கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : நவ 30, 2024 02:25 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'விவசாயிகளை கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகளை கட்-டுப்படுத்துவது குறித்தும், உரிய இழப்பீடு வழங்கவும், உரிய நட-வடிக்கை எடுக்கப்படும்,' என்று, திருப்பூர் கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா பகுதிகளில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்-ளன. இனபெருக்கத்தால், காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிக-ரித்து வருவதால், விவசாய பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன.எருமை மற்றும் மாடுகளை தாக்கி வந்த காட்டுப்பன்றிகள், மனிதர்களையும் தாக்க துவங்கிவிட்டதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட அளவிலான குறைகேட்பில், பல்-வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இதுதொடர்பாக பேசினர்.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து_விட்-டது; எவ்வித பயிர்களும் செய்ய முடியவில்லை. மாடுகளை முட்டி தாக்கும் பன்றிகள், தற்போது மனிதர்களை கண்டால், துரத்தி துரத்தி தாக்க துவங்கிவிட்டன. உயிர்பயத்துடன் வாழ வேண்டியுள்ளது.

காட்டுப்பன்றிகளை, வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கட்-டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''காட்டுப்பன்றி தொல்லை குறித்து, ஒவ்வொரு மாதமும் புகார் அளிக்கின்றனர். வேளாண் பயிர்களை பாதுகாக்க, காட்டுப்பன்றிகளை கட்டுப்ப-டுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நியாயமான இழப்பீடும் வழங்க வேண்டும். வனத்துறையினர் இதுதொடர்-பாக கள ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேச வேண்டும். காட்டுப்பன்றி பாதிப்பு தொடர்பாக, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், இதுதொ-டர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய பாதுகாப்பு _நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

எருமையின் தலை உடைந்தது

மடத்துக்குளம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேசு-கையில், 'எனது தோட்டத்தில், தினமும், 15 லிட்டர் பால் கற-வையுள்ள எருமை மாடு வளர்த்து வந்தேன். கடந்த சில நாட்க-ளுக்கு முன் காட்டுப்பன்றி, வேகமாக மோதியதில், எருமையின் தலை இரண்டாக உடைந்து இறந்து விட்டது' என கண்ணீர்மல்க பேசினார். இதை கேட்ட மற்ற விவசாயிகள், காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒரு-மித்த குரல் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us