/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் பயிரை காக்க கூடுதல் நீர் தேவை! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் பயிரை காக்க கூடுதல் நீர் தேவை! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் பயிரை காக்க கூடுதல் நீர் தேவை! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் பயிரை காக்க கூடுதல் நீர் தேவை! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 10:11 PM
உடுமலை, ;அமராவதி அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்று நீர் வழங்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில், அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் கதிர் பிடித்து, அறுவடைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், பாசனத்திற்கு நீர் திறப்பு கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கல்லாபுரம், ராமகுளம் பழைய வாய்க்கால் பாசனத்திலுள்ள, 2,834 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்ளை காப்பாற்றும் வகையில், கடந்த, 8ம் தேதி முதல், வரும், மே 20ம் தேதி வரை, 25 நாட்கள் நீர் திறப்பு, 17 நாட்கள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில், 42 நாட்களில், 108 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போல், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், மீதமுள்ள ஆறு வாய்க்கால்களின் கீழ் பாசன வசதி பெறும் நிலங்களில், நிலைப்பயிராக உள்ள நெற் பயிரை காப்பாற்றும் வகையில், ஒரு சுற்று தண்ணீராவது வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.