/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் திருட்டை தடுக்க ரோந்து விவசாயிகள் வலியுறுத்தல்
/
தண்ணீர் திருட்டை தடுக்க ரோந்து விவசாயிகள் வலியுறுத்தல்
தண்ணீர் திருட்டை தடுக்க ரோந்து விவசாயிகள் வலியுறுத்தல்
தண்ணீர் திருட்டை தடுக்க ரோந்து விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 21, 2025 05:04 AM
உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், உடுமலை கால்வாய் வாயிலாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை அருகே, பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து, 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.
பாசன காலத்தில், வழியோரத்தில், தண்ணீர் திருட்டு காரணமாக, கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. பருவமழை பெய்யாத பகுதிகளில், நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு, தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது.
எனவே, அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் திருட்டை தடுக்க, இரவு நேரங்களில், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று, தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

