/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 16, 2025 12:01 AM
பொங்கலுார்: பொங்கலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பொம்முராஜ் அறிக்கை:
மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகள், பொது சேவை மையம் ஆகிய இடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். மக்காச்சோளம் ஏக்கருக்கு, 545 ரூபாய், சோளப்பயிருக்கு, 55, கொண்டைக்கடலை ஒரு ஏக்கருக்கு, 254 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பயிர்கள் பாதிக்கப்பட்டால் மக்காச்சோளத்திற்கு பயிர் இழப்பீடு தொகை ஏக்கருக்கு 36 ஆயிரத்து 300, சோளப் பயிருக்கு, 3,638 கொண்டைக்கடலைக்கு, 16,940 ரூபாய் கிடைக்கும். மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிருக்கு வரும், 30 ம் தேதி, சோளப் பயிருக்கு டிச., 16 கடைசி நாள்.

