/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹார்டுவேர்' இலவச பயிற்சி வகுப்பு
/
'ஹார்டுவேர்' இலவச பயிற்சி வகுப்பு
ADDED : நவ 15, 2025 11:15 PM
திருப்பூர்: கனரா வங்கி பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு, கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங், -45 நாள் முழு நேரப்பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. பயிற்சிக்கான நேர்காணல் வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர குறைந்த காலியிடங்களே உள்ளதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க, 'கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கேயம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும். விவரங்களுக்கு மொபைல் போன் எண் 9489043923.

