/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கொள்முதல் மையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
அரசு கொள்முதல் மையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அரசு கொள்முதல் மையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அரசு கொள்முதல் மையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 13, 2024 07:15 AM
உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மடத்துக்குளம் தாலுகா கூட்டம் நடந்தது. தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, கணியூர், கடத்துார், சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம், வேடபட்டி உள்ளிட்ட நெல் அறுவடை நடக்கும் பகுதிகளில், உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறந்து, விவசாயிகளிடமிருந்து, கட்டுப்பாடுகள் இல்லாமல், கொள்முதல் செய்ய வேண்டும்.
தென்னை இளங்கன்றுகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்கள் மற்றும் நெல் நாற்றங்கால்கள், கரும்பு, மக்காச்சோளம் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டருக்கு, மடத்துக்குளம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.