sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்

/

குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்

குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்

குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்

1


ADDED : ஜூன் 27, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகள் திரளாக பங்கேற்று, தங்கள் பிரச்னைகளை, கலெக்டரிடம் கொட்டித்தீர்த்தனர்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமைவகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு உள்பட அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய கலெக்டர் பொறுப்பேற்றபின் நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால், மாவட்டம் முழுவதுமிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் 600 பேர் வந்திருந்தனர். விவசாயிகள், தங்கள் பிரச்னைகளை மனுவாக அளித்துவிட்டு, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் முன் பேசினர்.

விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும்


விவசாயிகள் 300 பேரை அழைத்துவந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி பேசியதாவது:

இருகூரிலிருந்து பெங்களூரு வரை எண்ணெய் குழாய் பதிக்கும் இரண்டாவது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், முத்துாரிலிருந்து, பெங்களூர் வரை, 270 கி.மீ., துாரத்துக்கு சாலை ஓரமாகவே குழாய் பதிக்கப்படுகிறது. முத்துார் வரை, ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வழியாகவே, புதிய குழாய் அமைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையில், 'நகரங்களுக்குள் குழாய் பதிக்க முடியாது; மாற்றுப்பாதையில் கொண்டுசெல்லும்போது, புதிதாக பல விவசாயிகள் பாதிக்கப்படுவர்' என எண்ணெய் நிறுவன தரப்பினர் தெரிவித்தனர்.

தற்போது சூழல் மாறியுள்ளது. பல்லடம் காங்கயம், வெள்ளகோவில் ஆகிய மூன்று நகரங்களிலும் பைபாஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டம் தயாரித்துள்ளது. எனவே, எண்ணெய் குழாய்களை நெடுஞ்சாலை ஓரம் அமைக்கவேண்டும். இதன்மூலம், விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும், என்றார்.

'உங்கள் கருத்துகளை குறித்துவைத்துக்கொள்கிறேன். எண்ணெய் நிறுவனங்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும்' என, கலெக்டர் பதிலளித்தார்.

கூட்டுறவு சங்க கிளை துவங்குங்கள்


அலங்கியம் விவசாயி பழனிசாமி:

அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம், தளவாய் பட்டணம், தாராபுரம், கொழிஞ்சிவாடி பாசன வாய்க்கால்களை துார்வாரவேண்டும். தளவாய் பட்டணத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. அலங்கியம் பகுதி விவசாயிகள் சென்றுவர சிரமம் ஏற்படுவதால், அலங்கியத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கிளை துவக்கவேண்டும்.

இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை


பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி:

திருப்பூர் மாவட்டத்தில் நாய்கடிக்கு பலியாகும் ஆண்டுகளால், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது. 2024, ஏப்ரல் 1 முதல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகை எப்பொழுது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தொடர்பாக எந்த அதிகாரியை தொடர்புகொள்ளவேண்டும். பி.ஏ.பி., தொகுப்பணைகளில் தண்ணீர் இருந்தும், கடைமடையான வெள்ளகோவிலுக்கு குறைந்தபட்ச தண்ணீர் கூட வந்துசேர்வதில்லை. அதிகாரிகள், சமச்சீர் பாசனம் என்று கூறுவதை ஏற்க முடியாது. கலெக்டர் நேரில் வந்து ஆய்வு நடத்தினால், அளவீடு செய்து உறுதிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

தவறான தகவல்களால் விற்பனை பாதிப்பு


தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழு செயலாளர் குமார்:

கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது போன்ற தவறான தகவல்களால், திருப்பூர் மாவட்டத்தில் மாம்பழம் விற்பனையும்; ரசாயனம் பயன்படுத்துவதாக பரவும் தகவல்களால் தர்பூசணி விற்பனையும் சரிந்துள்ளன. இதனால், மாம்பழம், தர்பூசணி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டக்கலைத்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, விவசாயிகளை பாதுகாக்கவேண்டும்.

பொது வினியோக திட்ட இணையதளத்தில், ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் கிராமம் விடுபட்டுள்ளது. சில கிராமங்களின் பெயர்கள் பிழையாக உள்ளன. இதனால், ரேஷன் கார்டுகளிலும் கிராமத்தின் பெயர்கள் தவறுகளோடு அச்சிடப்படுகிறது. இணையதளத்திலுள்ள எழுத்துப்பிழைகளை சரி செய்யவேண்டும்.

---

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் பலர் நின்றுகொண்டே கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தது.

30 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவு

குறைகேட்பு கூட்டத்தின் துவக்கத்தில், துறை சார்ந்து நிலுவையில் உள்ள மனுக்கள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. சில துறையினர், விவசாயிகளின் மனுக்களுக்கு உரிய தீர்வு காணாமலும், பதிலளிக்காமலும் மாதக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர். இதையறிந்த கலெக்டர், 'குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் பிரச்னைகளை, துறை சார்ந்த அரசு அலுவலர்கள், குறித்துவைத்துக்கொள்ளவேண்டும். விவசாயிகளின் மனுக்கள் மீது, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்' என, அறிவுறுத்தினார்.



தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

குறைதீர் கூட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது; இது தவிர்க்கப்பட வேண்டும்.'விவசாயம் தொடர்பான பிரச்னைகளை மட்டும் பேச வேண்டும்' என்று கட்டுப்பாடு விதித்தார் கலெக்டர்; இதனால், வேறு பிரச்னைகள் பேசுவதும், கூட்டம் நீண்டு செல்வதும் தவிர்க்கப்பட்டது.கூட்டத்தில் வீடியோ எடுப்பது போன்ற விஷயங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.








      Dinamalar
      Follow us