/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிர்வாகத்துக்கு பண்ணைக்குட்டை விளைநிலங்களில் அமைப்பு
/
நீர் நிர்வாகத்துக்கு பண்ணைக்குட்டை விளைநிலங்களில் அமைப்பு
நீர் நிர்வாகத்துக்கு பண்ணைக்குட்டை விளைநிலங்களில் அமைப்பு
நீர் நிர்வாகத்துக்கு பண்ணைக்குட்டை விளைநிலங்களில் அமைப்பு
ADDED : மே 26, 2025 04:46 AM

உடுமலை; வறட்சி காலத்தில், நீர் நிர்வாகத்தை பின்பற்ற, விளைநிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து நீர் பாய்ச்சும் முறையை, உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், காய்கறி சாகுபடியில், சிறு, குறு விவசாயிகள் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். சாகுபடியின் பாசன நீர் தேவைக்காக, விளைநிலங்களில் போர்வெல் அமைத்து பயன்படுத்துகின்றனர்.
கோடை காலங்களில் போர்வெல்களில் நீர்மட்டம் குறைவதால், காய்கறி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது பாதிக்கிறது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே போர்வெல்களை இயக்க முடியும்.
எனவே, விளைநிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்படுத்தும் முறையை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். போர்வெல்களை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கி, தண்ணீரை பண்ணைக்குட்டைகளில் சேகரிக்கின்றனர்.
பின்னர், அக்குட்டைகளில் இருந்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். மழைக்காலங்களில், மழை நீரை சேகரிக்கும் கட்டமைப்பாகவும், இந்த குட்டைகள் பயன்படுகிறது.
முன்பு, விளைநிலங்களில் பண்ணைக்குட்டை அமைக்க, பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது.
விவசாயிகள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, கோடை மழை போதியளவு பெய்யவில்லை. நிலைமையை சமாளிக்க பண்ணைக்குட்டைகளில், போர்வெல் தண்ணீரை சேகரித்து பயன்படுத்துகிறோம். குறித்த நேரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கினால், காய்கறி சாகுபடி பரப்பு குறையாது' என்றனர்.