/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய பென்சன் திட்டம் கோரி உண்ணாவிரதம்
/
பழைய பென்சன் திட்டம் கோரி உண்ணாவிரதம்
ADDED : அக் 24, 2024 11:55 PM

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும்; ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். தெய்வேந்திரன் வரவேற்றார். மாநில துணை தலைவர் செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கினார். நவீன் நன்றி கூறினார்.