/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தந்தை, மகனுக்கு கத்திக்குத்து: 4 பேர் கைது; 4 பேருக்கு வலை
/
தந்தை, மகனுக்கு கத்திக்குத்து: 4 பேர் கைது; 4 பேருக்கு வலை
தந்தை, மகனுக்கு கத்திக்குத்து: 4 பேர் கைது; 4 பேருக்கு வலை
தந்தை, மகனுக்கு கத்திக்குத்து: 4 பேர் கைது; 4 பேருக்கு வலை
ADDED : ஆக 06, 2025 11:01 PM
திருப்பூர்; காங்கயம், ராஜீவ் நகரை சேர்ந்தவர் செந்தில், 47; மில் தொழிலாளி. இவரது மகன் கோகுல், 23. நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே தேனியை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் மதுபோதையில் ஒரே டூவீலரில் வந்தனர். அப்போது, செந்தில் வளர்த்து வந்த நாய் மிரண்டு ஓட, இதுகுறித்து செந்தில் குடும்பத்தினர் கேட்டனர். இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்விரோதம் காரணமாக சரவணன், பார்வர்டு பிளாக் கட்சி ஐ.டி., விங் மாவட்ட நிர்வாகி கோகுல் மற்றும் கூலிபடையை வரவழைத்து, தந்தை மற்றும் மகனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, கோகுல், சரவணன், மதன்குமார், கார்த்தி, என, நான்கு பேரை கைது செய்தனர். மேலும், நான்கு பேரை தேடி வருகின்றனர் .