/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை
/
மணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை
ADDED : ஆக 06, 2025 11:01 PM
திருப்பூர்; திருப்பூர் வீரபாண்டி முத்து நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19; தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் தஞ்சாவூரை சேர்ந்த பூபதி, 24 என்பவரை காதலித்து, கடந்த மாதம் திருமணம் செய்து, தஞ்சாவூரில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இருவீட்டார் பெற்றோரையும் அழைத்து போலீசார் தகவலை தெரிவித்தனர். இளம்பெண், காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தஞ்சாவூரில் தம்பதி தங்கினர். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின், பிரியதர்ஷினி வெள்ளகோவிலில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் பெட்ரூமில் துாக்குமாட்டி இறந்தார். சடலத்தை மீட்டு வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, ஒரு மாதத்தில் தற்கொலை செய்தது தொடர்பாக, தாராபுரம் ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.