/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகனின் உயர் கல்வி பாதிப்;பு தந்தை தீக்குளிக்க முயற்சி
/
மகனின் உயர் கல்வி பாதிப்;பு தந்தை தீக்குளிக்க முயற்சி
மகனின் உயர் கல்வி பாதிப்;பு தந்தை தீக்குளிக்க முயற்சி
மகனின் உயர் கல்வி பாதிப்;பு தந்தை தீக்குளிக்க முயற்சி
ADDED : மே 20, 2025 12:52 AM

திருப்பூர்; திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையம், ஜி.எம்., பாலன் நகரை சேர்ந்த நாகேஷ்வரன். மனைவி அமுதா மற்றும் மகன் அழகேஷூடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நாகேஷ்வரன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், கையிலிருந்து கேனை பறித்துவிட்டு, உடலில் தண்ணீர் ஊற்றினர்.
நாகேஷ்வரன் கூறியதாவது: எனது மகன் அழகேஷ், கரைப்புதுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கல்லுாரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்தேன். இதனால், கல்லுாரி நிர்வாகத்தினர் என்னை தகாத வார்த்தையால் திட்டினர். 15ம் தேதி மகனிடம் கல்விக்கட்டணம் 22 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பியபோதும், தேர்வு எழுத விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் எனது மகனில் உயர்கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
அதே வகுப்பில் ஒரு மாணவருக்காக, 14ம் தேதி, 22 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தினோம். கல்லுாரி நிர்வாகமோ, 17,700 ரூபாயை, 18ம் தேதி செலுத்தியதாக பொய்யான ரசீது வழங்கினர். எனது மகன் உயர் கல்வியை தொடர ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் அவரை அழைத்துச்சென்று, குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கச் செய்தனர்.