/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருமகன் கொலை: மாமனாருக்கு ஆயுள்
/
மருமகன் கொலை: மாமனாருக்கு ஆயுள்
ADDED : நவ 06, 2025 04:25 AM
திருப்பூர்: வெள்ளகோவில், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சூர்யா, 46; வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் சினேகாவை, ராஜசேகர், 31 என்பவர் இரண்டாவது திருமணம் செய்தார். இதனால், மகள், மருமகன் மீது கோபத்தில் சூர்யா இருந்து வந்தார்.
தம்பதி பூக்கடை நடத்தி வந்தனர். பூக்கடை நடத்துவது தொடர்பாக, மாமனார், மருமகன் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. 2020 பிப். 16ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில், கத்திரிக்கோலால், ராஜசேகரை, சூர்யா குத்தியதில் இறந்தார்.
கொலை தொடர்பாக சூர்யாவை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, தாராபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. அதில், குற்றவாளி சூர்யாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சரவணன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

