/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமான மல்பெரிக்கு உர நிர்வாகம்; வேளாண் பல்கலை., அறிவுரை
/
தரமான மல்பெரிக்கு உர நிர்வாகம்; வேளாண் பல்கலை., அறிவுரை
தரமான மல்பெரிக்கு உர நிர்வாகம்; வேளாண் பல்கலை., அறிவுரை
தரமான மல்பெரிக்கு உர நிர்வாகம்; வேளாண் பல்கலை., அறிவுரை
ADDED : ஜூலை 23, 2025 09:06 PM

உடுமலை; தரமான மல்பெரி இலைகள் உற்பத்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செடியை அடிவெட்டு வெட்டி பராமரித்து, உர நிர்வாகத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என, கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. தரமான பட்டுக்கூடுகளை பெற, மல்பெரி இலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கும் மல்பெரி இலைகளை தரமாக பெற, பல்வேறு வழிகாட்டுதல்களை கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி, மல்பெரி செடி பராமரிப்பில், தழைச்சத்து, நிர்வாகத்தை மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். 'அசோஸ்பைரில்லம்' போன்ற உயிர் உரங்களை மல்பெரி பயிருக்கு, ஆண்டுக்கு ெஹக்டேருக்கு, 20 கிலோ இட்டு ரசாயன உரத் தேவையை 25 சதவிகிதம் (75 கிலோ) குறைத்துக்கொள்ளலாம்.
உயிர் உரங்களுடன், சணப்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக வளர்த்து மடக்கி விடுவதால் தழைச்சத்து, பரிந்துரையில் 50 சதவிகிதத்தை (150 கிலோ) குறைத்துக்கொள்ளலாம்.
'பாஸ்போபாக்டீரியா' போன்ற உயிர் உரங்களை ெஹக்டேருக்கு ஆண்டுக்கு, 10 கிலோ என்றளவில் இடும்போது, மணிச்சத்து பரிந்துரையில், 25 சதவிகிதத்தை (30 கிலோ) குறைக்கலாம்.
பயிர் மகசூலைக்குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பது களைகளே ஆகும். இதனால், சுமார் 40 சதவிகிதம் வரை இலை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு முறை கவாத்துக்கு பின் களை நீக்கம் செய்யவேண்டும். மல்பெரியில் ஒரு கிலோ இலை உற்பத்திக்கு சுமார், 320 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் போது சுமார், 40 சதவிகித நீரைச் சேமிக்க முடியும்.
தண்ணீர் சற்றே உப்புத்தன்மை உடையதாக இருந்தாலும், சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக, 10--12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியை பராமரிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, செடியினை அடிவெட்டு வெட்டி பராமரிக்கவேண்டும். இவ்வாறு செய்தால், செடி நட்டதிலிருந்து, 12 முதல் 15 ஆண்டு மகசூல் குறைவின்றி தோட்டத்தைப் பராமரிக்கலாம்.
இவ்வாறு, பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.