/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்டிகை முன்பணம், சம்பளம் மாநகராட்சி ஊழியருக்கு சிக்கல்
/
பண்டிகை முன்பணம், சம்பளம் மாநகராட்சி ஊழியருக்கு சிக்கல்
பண்டிகை முன்பணம், சம்பளம் மாநகராட்சி ஊழியருக்கு சிக்கல்
பண்டிகை முன்பணம், சம்பளம் மாநகராட்சி ஊழியருக்கு சிக்கல்
ADDED : அக் 18, 2024 06:35 AM
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. 'தீபாவளி முன்பணம் கிடைக்கவில்லை; சம்பளம் கிடைப்பதே சந்தேகமாக உள்ளது' என்கின்றனர் அலுவலர்கள்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராகப் பணியாற்றிய பவன்குமார், பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மாநகராட்சி துணை கமிஷனர் சுந்தர ராஜன் கூடுதல் பொறுப்பாக கமிஷனர் பணிகளை கவனித்து வருகிறார்.
கமிஷனர் பொறுப்பு என்ற அடிப்படையில் அலுவலகப் பணிகள், கடித தொடர்பு, கோப்புகள் மீதான நடவடிக்கைகளை மட்டும் அவர் கவனித்து வருகிறார். அவருக்கு நிதியாதாரங்களை கையாளும் வகையில், 'செக்' அதிகாரம் வழங்கப்படவில்லை.தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோரிக்கை விடுக்கும் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு பண்டிகை முன் பணம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணை கமிஷனருக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்பதால், ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வழியில்லாத நிலை உள்ளது.
தங்கள் பண்டிகை ெசலவுக்கு இதை எதிர்பார்த்திருந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.