/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலையோரம் பிளாஸ்டிக் குவியல் களப்பணியில் அகற்றம்
/
நீர்நிலையோரம் பிளாஸ்டிக் குவியல் களப்பணியில் அகற்றம்
நீர்நிலையோரம் பிளாஸ்டிக் குவியல் களப்பணியில் அகற்றம்
நீர்நிலையோரம் பிளாஸ்டிக் குவியல் களப்பணியில் அகற்றம்
ADDED : ஜன 26, 2025 03:33 AM

திருப்பூர்: திருப்பூரில், நீர்நிலை பகுதிகளில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.மண் வளத்தை நாசமாக்கி, சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு முழுதும், மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை, நெகிழி சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று, நீர்நிலை பகுதிகளில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணி நடந்தது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் இணைந்து இப்பணி மேற்கொண்டனர். நொய்யலாற்றங்கரை பகுதிகளான காசிபாளையம், ஆண்டிபாளையம், ராயபுரம், சிறுபூலுவப்பட்டி பகுதி; நல்லாற்றங்கரை பகுதிகளான அங்கேரிபாளையம், நஞ்சராயன்குளம் மற்றும் உப்பாறு அணை, அமராவதி, திருமூர்த்தி அணைகள், சாமளாபுரம் ஏரி சுற்றுப்பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது.இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினருடன் அந்தந்த பகுதியில் உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள், பொது சுத்திகரிப்பு நிலைய பணியாளர்கள் இணைந்தனர்.
நஞ்சராயன் குளம் பகுதியில் நடந்த பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் வனத்துறை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவர்கள் பங்கேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் டாக்டர் ரமேஷ் பழனியப்பன் கூறுகையில், ''சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் வசம் ஒப்படைக்கப்படும்.
அதில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கும் பணியை அவர்கள் மேற்கொள்வர். அடுத்த மாதம், கடைசி சனிக்கிழமை, ஆன்மிக தலங்கள், அதன் வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது,'' என்றார்.

