நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: சைவத்தையும், தமிழையும் வளர்க்க பாடுபடும் கயிலை அறக்கட்டளை சார்பில் கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் ஐம்பெரும் விழா நடந்தது.
கூட்டு வழிபாடு, திருவாசகம் ஓதுதல், பஞ்சபுராணம் ஓதுதல், திருமுறைகள் ஓதுதல் மற்றும் எழுதுதல், உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தல், கோவில் கல்வெட்டுகளை படித்தல், குழந்தைகள் கலை நிகழ்ச்சி, சான்றிதழ் வழங்குதல் ஆகியவை நடந்தது.
இதில் கயிலை அறக்கட்டளை நிறுவனர் துரைசாமி மற்றும் ஊர் பொதுமக்கள், அறக்கட்டளை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

