/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிதி நிறுவன நிர்வாகி வெட்டி படுகொலை
/
நிதி நிறுவன நிர்வாகி வெட்டி படுகொலை
ADDED : டிச 02, 2024 04:30 AM

அவிநாசி: நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிக்கவுண்டன் புதுார் தாமரை கார்டன் பகுதியில் வசித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி, 36. இரண்டு மகள்கள் உள்ளனர்.
கார் விற்பனை கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ரமேஷ் நேற்று அதிகாலை, அப்பகுதியில் உள்ள சேலம் - கொச்சின் பைபாஸ், சர்வீஸ் சாலையில் வாக்கிங் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி தப்பினர்.
தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயத்துடன் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். போலீசார் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், கோவை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் ரமேஷ் இறந்தார். எஸ்.பி., அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் கூறுகையில், ''இரண்டுக்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பைனான்ஸ் தொழிலில் கொடுக்கல் - வாங்கல் விரோதத்தில் கொலை நடந்ததா என விசாரித்து வருகிறோம்,'' என்றார்.