/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விதைப்புப்பணி முடியுங்கள்' : வேளாண் துறை அறிவுரை
/
'விதைப்புப்பணி முடியுங்கள்' : வேளாண் துறை அறிவுரை
ADDED : அக் 11, 2024 11:44 PM
திருப்பூர்: ''வட கிழக்குப்பருவ மழையை பயன்படுத்தி, விதைப்பை விரைவில் முடிக்க வேண்டும்'' என, வேளாண் பல்கலை ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. வரும், 15ம் தேதி வரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல், மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை, 31 முதல், 33 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல், 23 டிகிரி செல்சியஸாக இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதமாகவும்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு. சராசரியாக காற்று, மணிக்கு, 6 முதல், 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
விவசாய நிலங்களில் மண் ஈரத்தை பொறுத்து, நீர் பாசனத்தை ஒத்தி வைக்கலாம்; போதிய வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, வட கிழக்கு பருவமழை காலப் பயிர்களின் விதைப்பை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே பயிர் விளைந்துள்ள நிலங்களில் மறுவிதைப்பு செய்யலாம். மழையுடன் சற்று வேகமாக காற்று வீசக்கூடும் என்பதால், வாழைக்கு ஊன்று கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.