/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்
/
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்
ADDED : மார் 27, 2025 12:30 AM

திருப்பூர்; திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் எரிந்து போனது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் உதயசந்திரன், 40. இவர் திருப்பூர், காலேஜ் ரோடு, வசந்தம் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். பனியன் ரோல் துணி கொண்டு வரப்பட்டு, கட்டிங் செய்து, பனியனில் லேபிள் பொருத்தும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு பணி முடிந்து நிறுவனம் பூட்டப்பட்டது.
இச்சூழலில், நள்ளிரவில் பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் போராடி யும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் எரிந்து போனது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.