/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி மாதம் அடித்த காற்று காற்றாலை இயந்திரத்தில் தீ
/
ஆடி மாதம் அடித்த காற்று காற்றாலை இயந்திரத்தில் தீ
ADDED : ஜூலை 17, 2025 10:51 PM

தாராபுரம்; தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான காற்றாலை இயந்திரம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சமீப காலமாக காற்றாலை இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் சேதம் ஏற்பட்டு வருகின்றது. தாராபுரம் முண்டுவேலம்பட்டி அருகே தாராபுரம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள காற்றாலை இயந்திரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவலின் பேரில், தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றாலை இயந்திரம் அதிக காற்று காரணமாக, உராய்வு ஏற்பட்டு தீ பிடித்துள்ளதாக சர்வீஸ் மேலாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் இதேபோல், அலங்கியம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள காற்றாலை இயந்திரம் ஒன்று, காற்றின் வேகம் தாங்காமல், உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள காற்றாலை இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.