/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் தீவிபத்து; பொருட்கள் நாசம்
/
வீடுகளில் தீவிபத்து; பொருட்கள் நாசம்
ADDED : மார் 17, 2025 01:48 AM

திருப்பூர்; திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகர் 2வது வீதியை சேர்ந்தவர் இளங்கோ, 45. சிறிய அளவில் பனியன் தொழில் செய்து வருகிறார். ஒரு பகுதியில் வீடும், மற்றொரு பகுதியில் பனியன் தயாரிப்பும் செய்து வருகிறார். நேற்று திடீரென பனியன் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
வீட்டுக்குள் துாங்கி கொண்டிருந்த இளங்கோ உள்ளிட்டோர் வெளியேறினர். தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பனியன், மெஷின், வீட்டிலிருந்த பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து போனது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு வீட்டிலும் தீ: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி அருகே ரம்யா, 27 என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஊத்துக்குளி தீயணைப்பு துறை யினர் தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.