நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், பி.என்., ரோடு புஷ்பா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 40. அதே ரோட்டில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை திறந்த அவர், பூஜையறையில் விளக்கேற்றினார்.
எதிர்பாராத விதமாக விளக்கு தவறி கீழே விழுந்து, அங்கிருந்த அட்டை பெட்டிகளில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விரைந்து அணைத்த காரணத்தால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மொபைல் போனுக்கான அட்டைப்பெட்டிகள், பழைய பில்கள் போன்றவற்றை மட்டும் எரிந்தன. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

