/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பு தோட்டத்தில் தீ; போராடி அணைப்பு
/
கரும்பு தோட்டத்தில் தீ; போராடி அணைப்பு
ADDED : ஜூன் 30, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அருகே, கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
உடுமலை அருகேயுள்ள வட பூதனத்தில், கிருஷ்ணசாமிக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலத்தில், கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. நேற்று, கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடுமலை தீயணைப்பு துறையினர், தீ பரவாமல், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.