/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 06, 2026 05:06 AM

உடுமலை: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், உடுமலை பகுதியிலுள்ள, வெஞ்சமடை, ருத்ரப்ப நகர், சின்ன வீரம்பட்டி, பழனியாண்டவர் நகர், காமராஜ் நகர் மற்றும் நெல்லுக்கடை வீதி ஆகிய பகுதிகளிலுள்ள, அரசு நடுநிலை பள்ளிகளில், ஆறு முதல், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்க்கு, பேரிடர் மேலாண்மை, தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதில், தீ என்றால் என்ன, தீ உருவாக என்ன பொருட்கள் தேவை, தீயை அணைக்கும் முறைகள், தீ விபத்தின் வகைகள், பள்ளி வகுப்பறையில் தீ ஏற்பட்டால் மாணவர்கள் எவ்வாறு செயல்படுவது. மின்சாதன பொருட்களில், டேமேஜ் ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாதது.
தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள், உயரமான கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் லிப்டினை பயன்படுத்தாமல், படிக்கட்டில் இறங்க வேண்டும் போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஒருவர் மீது தீப்பிடித்துக் கொண்டால், அத்தீயினை எவ்வாறு, அணைப்பது, முதல் உதவி சிகிச்சை, கோடை காலம் நெருங்கி வருவதால், வெப்ப அலைகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்ற வகுப்பு நடத்தப்பட்டது.
அதற்கு பின், மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

