/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிறுவனத்தினருக்கு தேவை தீத்தடுப்பு விழிப்புணர்வு'
/
'நிறுவனத்தினருக்கு தேவை தீத்தடுப்பு விழிப்புணர்வு'
'நிறுவனத்தினருக்கு தேவை தீத்தடுப்பு விழிப்புணர்வு'
'நிறுவனத்தினருக்கு தேவை தீத்தடுப்பு விழிப்புணர்வு'
ADDED : ஆக 13, 2025 10:39 PM

திருப்பூர்; தீ விபத்து தடுப்பு மற்றும் காப்பீடு தொடர்பான சிறப்பு கருத்தரங்கு, திருப்பூர் 'சைமா' கூட்டரங்கில் நேற்று நடந்தது. தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் கோவிந்தப்பன் வரவேற்றார்.
துணைத்தலைவர் பாலசந்தர் பேசுகையில், ''தீ விபத்தால் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது; காப்பீடு செய்வது வீண் செலவு என்று கருதக்கூடாது; அதுவே முழுமையான பாதுகாப்பை கொடுக்கும். நள்ளிரவு நேர தீ விபத்தில் அதிக சேதம் ஏற்படுவதால், புகை கண்காணிக்கும் கருவிகளை பொருத்த வேண்டும்,'' என்றார்.
35 நிறுவனங்களில்இந்தாண்டு தீவிபத்து திருப்பூர் மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் வீரராஜ் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டில், இதுவரை, 35 நிறுவனங்களில் தீ விபத்து நடத்துள்ளது. தீ விபத்தை தடுப்பதை காட் டிலும், வருமுன் காப்பதே சிறப்பானது; நஷ்டத்தை தவிர்க்கும். அதற்காகவே, தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
திருப்பூர் சுற்றுப்பகுதியை பொறுத்தவரை, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தான் அதிகம் விபத்து நடக்கிறது; நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. அதாவது, நிறுவனங்கள் விடுமுறையாக இருக்கும் நாளில் நடக்கிறது. எனவே, புகை கண்காணிப்பு கருவியை சரியான உயரத்தில் பொருத்தியிருந்தால், முன்கூட்டியே அலாரம் செய்யும்; தீ விபத்தை தடுக்கும்.
வழிகாட்டுதலைபின்பற்றுங்கள் அதேபோல், தீ விபத்து தடுப்பு கருவிகளை, அடிக்கடி சரிபார்க்க வேண்டும்; பழுதுபாக்க வேண்டும். பெரிய நிறுவனங்களில், 'ஸ்பிரிங்ளர்' பொருத்தி வைப்பது நல்லது. தீயணைப்புத்துறையினர், விடுமுறையாக இருந்தாலும், முழுமையான ஏற்பாட்டுடன், எப்போதும் தயார் நிலையில் இருப்போம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெப்ப அலையால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. நகரப்பகுதியில் அதிக விபத்து நடக்கிறது. தீ விபத்துக்களை தவிர்க்க, தீயணைப்புத்துறையினர் வழிகாட்டுதலை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, தீத்தடுப்பு உபகரணங்கள் குறித்து நிறுவன பிரதிநிதி செந்தில்குமார் பேசினார். காப்பீடு திட்டங்கள் குறித்து, தனியார் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் விக்னேஷ், பிரியங்சிங் ஆகியோர் பேசினர்.