/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு குப்பை அகற்றம் :வாலிபர் சங்கத்தினர் சேவை
/
பட்டாசு குப்பை அகற்றம் :வாலிபர் சங்கத்தினர் சேவை
ADDED : அக் 21, 2025 10:58 PM

அவிநாசி: அவிநாசி நகர வீதிகளில், தீபாவளி பண்டிகை பட்டாசு குப்பை மற்றும் இதர குப்பைகளை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அள்ளி அப்புறப்படுத்தினர்.
அவிநாசி நகராட்சிக்குட்பட்ட வீதிகளில், பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதனால், பல தெருக்களில் பட்டாசு குப்பை குவிந்தது.
இந்நிலையில், அவிநாசி நகராட்சி துாய்மை பணியாளர்களுடன் இணைந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில், சுகாதார ஊழியர் வீதி, செல்லாண்டியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், துணை செயலாளர் ராஜேஸ்வரி, துணை தலைவர் நந்தகோபால், உறுப்பினர்கள் மகேந்திரன், ஜீவபாரதி, பத்ரன், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.