/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
/
கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : பிப் 20, 2024 05:28 AM
திருப்பூர்: முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மானுார். அங்குள்ள ஊர்கிணறு, தண்ணீரின்றி பாழடைந்து உள்ளது. மொத்தம், 65 அடி ஆழமுள்ள கிணற்றில், ஆண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். பொதுமக்கள் தகவல் கொடுத்ததால், திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, மீட்டனர்.
உடலில், பல காயங்களுடன், 47 வயதுள்ள ரஞ்சித் என்பவரை மீட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், கொடிசேகர் மேற்பார்வையில், அழகுராஜா, அங்குராஜன் ஆகிய வீரர்கள், கிணற்றில் இறங்கி, அடிப்பட்ட நபரை மீட்டனர். மேலும், ஐந்து அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பும் மீட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.