/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால விநாயகர் கோவில் முதலாமாண்டு விழா
/
பால விநாயகர் கோவில் முதலாமாண்டு விழா
ADDED : ஏப் 14, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : அந்தியூர் சடையகவுண்டன்புதுார் பிரிவு பால விநாயகர் கோவிலில், முதலாமாண்டு விழா நடந்தது.
அந்தியூர் சடையகவுண்டன்புதுார் பிரிவு ஜீவா நகர் பகுதியில், பால விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்தாண்டு நடந்தது. இதன் முதலாமாண்டு விழா கோவிலில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், பால விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
பால விநாயகர் சுவாமிக்கு, சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

