ADDED : ஜூன் 02, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று, 40 டன் கடல் மீன்கள்; 15 டன் அணை மீன்கள் விற்றுத்தீர்ந்ததாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். மூன்று வாரமாக விற்பனை குறைந்திருந்த நிலையில், நேற்று விற்பனை அதிகரித்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு என்பதால், அனைவரும் கடந்த வாரம், நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்தனர். நேற்று காலை முதலே இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மட்டன், சிக்கன் கடைகள் முன் மக்கள்காத்திருந்து இறைச்சி வாங்கிச் சென்றனர். இரு வாரங்களோடு ஒப்பிடுகையில் நேற்று விற்பனை பரவாயில்லை என, இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.