ADDED : மார் 11, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:அமாவாசை, சிவராத்திரி வந்ததால், மீன் விற்பனை சரிவு ஏற்பட்டது.
மீன் மார்க்கெட்டில், மத்தி, கிலோ 120, பாறை, 150, அயிலை, 250, வாவல், 230, வஞ்சிரம், 500, படையப்பா, 350, நண்டு, 450 ரூபாய்க்கு விற்றது. கடந்த, வெள்ளிக்கிழமை சிவராத்திரி, நேற்றுமுன்தினம் மாசி அமாவாசை என்பதால், காலை முதலே மீன் விற்பனை மந்தமாக இருந்தது. மொத்தமாக மீன்களை வாங்கி, விற்பனைக்கு கொண்டு சென்ற மொத்த மீன் வியாபாரிகளும், வழக்கத்தை விட விற்பனை சற்று குறைந்ததாக தெரிவித்தனர்.

