/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைகளில் அலைமோதல் 'துள்ளிய' மீன் விற்பனை
/
கடைகளில் அலைமோதல் 'துள்ளிய' மீன் விற்பனை
ADDED : ஜூன் 15, 2025 11:36 PM
திருப்பூர்; ஞாயிற்றுக்கிழமையான நேற்று, விசேஷ தினங்கள் இல்லாத நிலையில், அதிகாலை முதலே மீன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிளவில் வந்திருந்தனர்.
மொத்த வியாபாரிகளும் வழக்கத்தை விட கூடுதலாக மீன்களை விற்பனைக்கு வாங்கிச் சென்றனர்; மதியத்துக்குள், 50 டன் மீன்கள் விற்றுத்தீர்ந்தன. நேற்று மீன் கடைகள் மட்டுமின்றி மட்டன், சிக்கன் விற்கும் கடைகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் காணப்பட்டது.
மீன் வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த மூன்று வாரங்களாகவே மீன் விற்பனை மந்தமாக இருந்தது. கோடை விடுமுறைக்கு முன்பிருந்த கூட்டம், தற்போது மீண்டும் திரும்பியுள்ளது.
மீன் பிடி தடைகாலம் முடிந்த போதும், திருப்பூருக்கான மீன் வரத்து முழுமை பெறவில்லை. வரும் வாரத்தில் தான் மீன் வரத்து அதிகரிக்கும்.
அதற்கேற்ப விலை வரும் வாரத்தில் இன்னமும் குறையும்; விற்பனை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றனர்.