ADDED : மார் 18, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:கடந்த வாரம் சிவராத்திரி, அமாவாசை காரணமாக ஞாயிறு மீன் விற்பனை மந்தமானது. நேற்று திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கான மீன் வரத்து, 60 டன்னாக இருந்தது.
டேம் மீன்களை விட கடல் மீன்கள் அதிகமாக வந்திருந்தன. நேற்று பாறை, கிலோ 160 முதல், 180, சங்கரா, 350, விளா மீன், 300, அயிலை, 250, படையப்பா, 280, வஞ்சிரம், 550, நண்டு, 350 ரூபாய்க்கு விற்றது. காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒவ்வொரு கடை முன்பும் காத்திருந்து பலரும் மீன் வாங்கிச் சென்றனர். கடந்த இரண்டு வாரங் களாக மீன் விற்பனை சுறுசுறுப்பு இல்லாத நிலையில், நேற்று இயல்பு நிலை திரும்பியதால், மீன் வியாபாரிகள் ஆறுதல்அடைந்தனர்.

