/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐவர் கால்பந்து போட்டி; கோவை அணிக்கு கோப்பை
/
ஐவர் கால்பந்து போட்டி; கோவை அணிக்கு கோப்பை
ADDED : ஆக 28, 2025 06:09 AM

பல்லடம்; பல்லடம் நண்பர்கள் கால்பந்து குழுவின், 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, மூத்தோர் மற்றும் இளையோருக்கான ஐவர் கால்பந்து போட்டி, அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடந்தது.
இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 12 கால்பந்து அணிகள் பங்கேற்றன. ஏ.பி.சி.டி., என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. முதியோருக்கான போட்டியில், கோவை என்.எப்.சி., அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், குன்னுார் எஸ்.எஸ்.ஐ., அணியை தோற்கடித்தது.
இளையோருக்கான இறுதி போட்டியில், பல்லடம் நண்பர்கள் கால்பந்து அணி மற்றும் உடுமலை கால்பந்து அணி ஆகியவை சமநிலை அடைந்தன. டை பிரேக் அடிப்படையில், 6 - 5 என்ற கோல் கணக்கில் பல்லடம் நண்பர்கள் கால்பந்து அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், 3 - 2 என்ற கோல் கணக்கில், உடுமலை அணி, திருப்பூர் அணியை வென்றது. 10 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான போட்டியில், பல்லடம் நண்பர்கள் கால்பந்து அணி, 5 - 3 என்ற கோல் கணக்கில், பல்லடம் புளூ பேர்ட்ஸ் அணியை வென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பரிசு வழங்கப்பட்டது. நடராஜன் தலைமை வகித்தார். தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன், மரம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் பரிசுகளை வழங்கினார். நண்பர்கள் கால்பந்து அணி நிர்வாகி திருமூர்த்தி நன்றி கூறினார்.