ADDED : ஜன 13, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பொங்கலுார் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி செல்லப்பிள்ளைப்பாளையத்திலிருந்து கொடுவாய் நாச்சி பாளையம் ரோட்டை இணைக்கும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள ரோடு சேதம் அடைந்திருந்தது.
அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து,65 லட்சம் ரூபாய் செலவில் ரோடு அமைக்க கடந்தாண்டு பூமி பூஜை போடப்பட்டது.
அதன்பின் ரோட்டை தோண்டி சரளை கற்களை கொட்டினர். வேலை துவங்கி ஐந்து மாதங்கள் ஆகியும் இன்றுவரை வேலை முடிந்த பாடில்லை. அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ரோட்டில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக ரோடு போடும் பணியை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.