/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டம் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்
/
குண்டம் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்
ADDED : ஏப் 02, 2025 07:12 AM
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுாரில் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவில், 8ம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து வருகிறது. பக்தர்கள் பொங்கலிட வசதியாக கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அடுப்பு அமைக்க ஆங்காங்கே கற்களை போட்டுள்ளனர். குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அம்மனை தரிசிக்க செல்லும் பாதையில் பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

